உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கலைத்திருவிழா போட்டி

கலைத்திருவிழா போட்டி

கலைத்திருவிழா போட்டி அந்தியூர், நவ. 15-பள்ளிக்கல்வித்துறை சார்பில், அந்தியூர் அருகே இரட்டைகரடில் உள்ள தனியார் பள்ளியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான, கலைத்திருவிழா போட்டி நடந்தது. இதில் அந்தியூர், அம்மாபேட்டை, பவானி வட்டார அரசு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நடனம், நாடகம், பேச்சு, கட்டுர போட்டிகள், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில், ௪௦க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்வை அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி