உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கலைத் திருவிழா போட்டி

கலைத் திருவிழா போட்டி

டி.என்.பாளையம் :டி.என்.பாளையம் ஒன்றியத்தில் குறுவள மைய அளவிலான, கலைத் திருவிழா போட்டி பங்களாப்புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) செல்வம் தொடங்கி வைத்தார். விழாவில் குறுவள மையத்துக்கு உட்பட்ட, 10 அரசு பள்ளிகளில் நடந்த போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள் கலந்து கொண்டனர். பேச்சு போட்டி, நடனம் போட்டி, ஓவியம், மாறு வேடப்போட்டி, களிமண் பொம்மை செய்தல் உள்ளிட்ட பலவகை போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !