மேலும் செய்திகள்
விளைச்சல் அதிகரிப்பு பூக்கள் விலை சரிவு
26-Sep-2024
புன்செய் புளியம்பட்டி: பண்டிகை சீசன் முடிந்ததால் புன்செய் புளியம்பட்டி பூ மார்க்-கெட்டில் பூக்கள் விலை பல மடங்கு குறைந்தது. கிலோ 350 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி பூ கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையா-னது.புன்செய் புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூக்கள் சாகுபடி செய்-யப்படுகின்றன. குறிப்பாக, மல்லி, முல்லை மற்றும் சம்பங்கி பூக்கள் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள், புன்செய் புளியம்பட்டி பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஆயுதபூஜை, விஜயதசமி பண்-டிகை சீசன் உள்ளிட்ட காரணங்களால், பூக்களுக்கு தேவை அதிக-ரித்து அதிக விலை கிடைத்தது. இந்நிலையில் பண்டிகை முடிந்-ததால் மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் விலை பாதியாக குறைந்துள்ளது. ஆயுதபூஜை பண்டிகையின் போது கிலோ, 1,100 ரூபாய் வரை விற்பனையான மல்லிகை நேற்று, 400 ரூபாயாக சரிந்தது. 700 ரூபாய்க்கு விற்ற முல்லை, 120 ரூபாயாகவும், கிலோ, 350 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி பூ, 40 ரூபாயாகவும் சரிந்-தது.
26-Sep-2024