உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நிகழ்வு

பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நிகழ்வு

ஈரோடு: பாண்டியாறு - புன்னம்புழா திட்ட ஆலோசனை கூட்டம், ஈரோடு, மேட்டுக்கடை அருகே நேற்று நடந்தது.கீழ்பவானி விவசாயிகள் பாதுகாப்பு இயக்க தலைவர் ரவி தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்-கிணைப்பாளர் ஈசன், கொ.ம.தே.க., மாநில இளைஞரணி செயலர் சூரியமூர்த்தி, தமிழ்நாடு சிறுகுறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு, கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கம் நல்லசாமி மற்றும் பல்வேறு பகுதி விவசாயிகள் பேசினர்.பாண்டியாறு - புன்னம்புழா இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி வரும் செப்., மாதம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொதுக்கூட்டம் அல்லது பேரணி நடத்துவது. இதற்காக பாண்டி-யாறு - புன்னம்புழா ஒருங்கிணைப்பு குழு பெயரில் செயல்படு-வது என்றும் தீர்மானம் நிறைவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை