உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

தாராபுரம், அறப்போர் இயக்கம் சார்பில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம், தாராபுரத்தை அடுத்த மூலனுாரில் நேற்று நடந்தது. இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ௫௦க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசிடமிருந்து தகவல் பெறுதல், ஊழல்களை கண்டறிய பயன்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி