உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

ஈரோடு :ஈரோடு கே.எம்.சி.ஹெச்., ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், உலக இருதய தினத்தை முன்னிட்டு, 'இருதயத்தின் துடிப்பை இழக்காதீர்கள்' என்ற தலைப்பில் இருதய சிகிச்சைக்கு பின் வாழ்வியல் முறை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.மருத்துவமனை தலைவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் நல்லா பழனிசாமி தலைமை கித்து பேசுகையில்,'' ஒரு காலத்தில் இருதய சிகிச்சை அமெரிக்கா போன்ற நாடுகளில், செல்வந்தர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது, ஒருங்கிணைந்த இருதய சிகிச்சைக்காக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கேத்லேப் வசதியை நிறுவி, முழுநேர இருதய சிகிச்சை சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது,'' என்றார். பிவிபி பள்ளி தாளாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ராகவேந்திரன் பேசுகையில், '' தற்போதைய மருத்துவ வளர்ச்சி காரணமாக, பிற அறுவை சிகிச்சை போலவே பைபாஸ் அறுவை சிகிச்சையும் பாதுகாப்பான ஒன்றாக உள்ளது. கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில், 10 ஆண்டுகளில், 3,000க்கும் அதிகமான இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. பெரு நகர மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வசதிகளும், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் உள்ளது,'' என்றார்.முன்னதாக மருத்துவர் தேவிமீனா பிரபு வரவேற்றார். நிறைவில், மருத்துவ இயக்குனர் டாக்டர் மோகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை