மேலும் செய்திகள்
குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
24-Jul-2026
புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டியை சேர்ந்த தனியார் அமைப்பினர், போதைப்பொருள் இல்லாத சமுதாயம் உருவாக்குவோம் என்பது குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் போட்டியை நடத்தினர். பனையம்பள்ளி வரை ஆறு கி.மீ., துாரம் நடந்த போட்டியை, சத்தி டி.எஸ்.பி., முத்தரசு துவக்கி வைத்தார். இதில் அறக்கட்டளை நிறுவனர் இளங்கோவன், செயலாளர் அன்பு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பதிவு செய்திருந்த, 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
24-Jul-2026