உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீசார் சார்பில் விழிப்புணர்வு

போலீசார் சார்பில் விழிப்புணர்வு

காங்கேயம்: காங்கேயம் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு, காங்கேயத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., மாயவன் தலைமை வகித்தார். இதில் காங்கேயம் பகுதிக்கு உட்பட்ட கிராமங்கள், புறநகர் பகுதியில் தனியாக உள்ள தோட்டத்து வீடுகள், தனியாக வசிக்கும் முதியவர்கள் உள்ள வீடுகளில் 'சிசிடிவி' கேமரா மற்றும் சைரன்களை பொருத்த வேண்டும். வீடு தோறும் நாய் வளர்க்க வேண்டும். இரவு நேரங்களில் நாய்கள் சத்தமோ அல்லது கதவை தட்டினாலும் கதவை திறக்க கூடாது. இந்த தகவலை உடனடியாக பக்கத்தில் உள்ளவர்களுக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என, பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். கூட்டத்தில் காங்கேயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் மற்றும் நில வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன், மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ