மேலும் செய்திகள்
ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
01-Nov-2025
விழிப்புணர்வு
15-Oct-2025
ஈரோடு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிராம குடிநீர் திட்டம் சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரியா, பேரணி மற்றும் வாகன பிரசாரத்தை துவக்கி வைத்தார். வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்கினர். பேரணியில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு காட்சிகளை ஒளிபரப்பினர். * லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் நடந்தது. ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனரகம் சார்பில், அரசு தலைமை மருத்துவமனை அருகே துவங்கிய பேரணிக்கு, ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் ரேகா, விஜயலட்சுமி தலைமை வகித்தனர். இதில் பல்வேறு பள்ளி குழந்தைகள், பொது அமைப்பினர் பங்கேற்றனர்.
01-Nov-2025
15-Oct-2025