உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்துமிகு தானியங்கள் விளக்க விழிப்புணர்வு வாகனம்

சத்துமிகு தானியங்கள் விளக்க விழிப்புணர்வு வாகனம்

சத்துமிகு தானியங்கள் விளக்கவிழிப்புணர்வு வாகனம் கொடுமுடி, டிச. 12-கொடுமுடியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தேசிய உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், சத்துமிகு தானியங்கள் திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தை பேரூராட்சி தலைவர் திலகவதி சுப்ரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தில், சிறு தானியங்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. சத்துமிகு சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சிறு தானிய சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாகவும், சத்து மிகுந்த சிறுதானியங்கள் என்ற தலைப்பில் பிரசார வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, கொடுமுடி சுற்று வட்டார பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை