உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலை, சாக்கடை வசதி கோரி ஆயப்பாளி மக்கள் முறையீடு

சாலை, சாக்கடை வசதி கோரி ஆயப்பாளி மக்கள் முறையீடு

ஈரோடு, நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் தலைமையில், ஈரோடு மாநகராட்சி, 5வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஆயப்பாளி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: இப்பகுதி மமக்களுக்கு பல ஆண்டாக சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும். மாநகராட்சியில் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தவிர தார்ச்சாலை வசதியும் செய்து தர வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !