பவானியில் ஓடும் ஆட்டோவில் பெண்ணுக்கு பிறந்த குழந்தை
பவானி, பவானி அருகே செங்காட்டு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம், 32. இவரது மனைவி செல்வி, 28. இதே பகுதியில் கூலி வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன், பெண்ணை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். குருநாதகவுண்டர் வீதியில் செல்லும்போது, ஆட்டோவிலேயே பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆபத்து காலத்தில் உதவிய ஆட்டோ டிரைவர் ரமே ைஷ அப்பகுதி மக்கள் பாராட்டினர்.