உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் விழுந்த ஆண் குழந்தை பலி

கிணற்றில் விழுந்த ஆண் குழந்தை பலி

பவானி, ஆக. 24அம்மாபேட்டை அருகே குறிச்சி, சுப்பராயன் கொட்டகையை சேர்ந்தவர் கார்த்திகேயன், 27; தனியார் மில் டிரைவர். இவரின் மனைவி விமலா, 24; கூலி தொழிலாளி. தம்பதியின் மகள் சுகாசினி, 5; மகன் சஞ்சய்த், 3;கார்த்திகேயன் நேற்று வேலைக்கு சென்று விட்டார். மனைவி வீட்டில் துணி துவைத்து கொண்டிருந்தார். வீட்டருகில் தடுப்புச்சுவர் இல்லாத கிணறு உள்ளது. அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த சஞ்சய்த் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து விட்டான். குழந்தையை காணாமல் தேடியபோது கிணற்றில் சடலமாக மிதந்தது தெரிய வந்தது. குழந்தை மீட்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. vபிளாஸ்டிக் ஒழிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி