உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் பேக்கரி கடை உரிமையாளர் மனைவி பலி

விபத்தில் பேக்கரி கடை உரிமையாளர் மனைவி பலி

காங்கேயம், காங்கேயம், அய்யாசாமி நகர் காலனியை சேர்ந்தவர் கணேஷ், 49; பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுலோச்சனா, 47; இருவரும் வாலிப்பனங்காட்டில் இருந்து முத்துார் ரோடு வழியாக நேற்று முன்தினம் மாலை வேகன்-ஆர் காரில் காங்கேயம் வந்து கொண்டிருந்தனர். அப்போது கணேஷ் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதியது. இதில் காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுலோச்சனா உயிரிழந்தார். விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை