உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கருப்பண்ணசுவாமி கோவிலில் பாலாலயம்

கருப்பண்ணசுவாமி கோவிலில் பாலாலயம்

ஈரோடு: ஈரோடு பெரியார் நகரில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கருப்பண்ணசுவாமி கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, திருப்பணி தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணியாக பாலாலயம் நேற்று நடந்தது. கோவில் செயல் அலுவலர் திலகவதி தலைமை வகித்தார். அமைச்சர் முத்துசாமி, எம்.பி., பிரகாஷ், 45வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பிரவீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருப்பணிகளை முடித்து ஓராண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ