வாழைத்தார் ஏலம் துவக்கம்
கோபி:கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமை, வாழைத்தார் ஏலம், வியாழன் பாக்கு ஏலம், வெள்ளிக்கிழமை தேங்காய் ஏலம் நடக்கிறது. இந்நிலையில் கொண்டையம்பாளையம் சமுதாய நலக்கூடத்தில், முதன் முறையாக வரும் ஆக.,4ல், மதியம் 2:00 மணிக்கு வாழைத்தார் ஏலம் துவங்குகிறது. அதையடுத்து, ஆக.,11ல் காலையில் தேங்காய் ஏலம், மதியம் பாக்கு ஏலமும் துவங்குகிறது. வரும் வாரங்களில் இந்த ஏலம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.