வாழைத்தார் விலை உயர்வு
ஈரோடு:ஈரோடு வ.உ.சி., நேதாஜி காய்கறி மார்க்கெட்டில், ஆடிப்பெருக்கு பண்டிகையால் வாழைத்தார் விலை உயர்ந்தது.கடந்த வாரம் ரூ.500க்கு விற்ற செவ்வாழை தார் நேற்று, ரூ.600 முதல் ரூ.1,000 வரை விற்றது. இதேபோல் ரூ.350க்கும் விற்ற தேன்வாழை தார், ரூ.400 முதல் ரூ.800; ரூ.250க்கு விற்ற பூவன் தார் ரூ.350 முதல் ரூ.580; ரூ.280க்கு விற்ற பச்சைநாடான் ரூ.300 முதல் ரூ.550; ரூ.100க்கு விற்ற மொந்தன் ரூ.150 முதல் ரூ.380; ரூ.250க்கு விற்ற ரொபஸ்டா தார், ரூ.300 முதல் ரூ.580 வரை விற்றது. இதேபோல் கதலி கிலோ ரூ.58 முதல் ரூ.70, நேந்திரன் கிலோ ரூ.34 முதல் ரூ.40 வரை விற்றது.