உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் வாழை திசு வளர்ப்பு மையம் திறப்பு

அந்தியூரில் வாழை திசு வளர்ப்பு மையம் திறப்பு

அந்தியூர், அந்தியூர் அருகே அண்ணாமடுவு பீப்பாகாரர் தோட்டத்தில், சத்யா பயோடெக் திசு வளர்ப்பு வாழை மையம் திறப்பு விழா, விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.முதன்மை விஞ்ஞானி அழகேசன், விதை ஆய்வாளர் சாந்தி, ஈரோடு தோட்டக்கலை துணை இயக்குனர் குரு சரஸ்வதி முன்னிலை வகித்தனர். முதன்மை விஞ்ஞானி ஜெயபாஸ்கரன், கதலி, நேந்திரன், செவ்வாழை, ஜி-9 உள்ளிட்ட ரக வாழை மரங்கள் திசு வளர்ப்பு முறையில் சாகுபடி செய்வது குறித்து விளக்கினார்.வாழை மேலாண்மை, மதிப்புக்கூட்டல், உற்பத்தி, பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் பற்றி விஞ்ஞானி சரஸ்வதி பேசினார். முன்னதாக திசு வளர்ப்பு மையம் திறக்கப்பட்டு, நிறுவனர் உத்திரசாமி குத்துவிளக்கேற்றினார்.நிகழ்வில் விஞ்ஞானி லோகநாதன் மற்றும் அந்தியூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். சத்யா பயோடெக் இயக்குனர் விக்ரமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ