உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாரத்தில் 5 நாட்கள் பணி; வங்கி ஊழியர் எதிர்பார்ப்பு

வாரத்தில் 5 நாட்கள் பணி; வங்கி ஊழியர் எதிர்பார்ப்பு

ஈரோடு: வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாள் வேலை என்ற திட்டத்தை அமல்படுத்த கோரி, அனைத்து தொழிற்சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து, நேற்று பணியில் ஈடுபட்டனர். தேசிய வங்கி, கூட்டுறவு வங்கி, அர்பன் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கி ஊழியர்கள், அதிகாரி-களும் இதில் கலந்து கொண்டனர். மாவட்டத்தில், 18 வங்கி-களின், 300க்கும் மேற்பட்ட கிளைகளில் பணியாற்றும், 2,800 ஊழியர், அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணி செய்ததாக, மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செய-லாளர் நரசிம்மன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி