உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடன் தர வங்கி மறுப்பு போராட்டம் அறிவிப்பு

கடன் தர வங்கி மறுப்பு போராட்டம் அறிவிப்பு

ஈரோடு, பெருந்துறை தாலுகா கருப்பம்பாளையம் காலனியை சேர்ந்த பூபாலகுமார், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:தாட்கோ மூலம் பன்றி வளர்ப்பு தொழில் கடன் கோரி விண்ணப்பித்து தேர்வானேன். நல்லாம்பட்டி பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு பரிந்துரைத்து, கடன் வழங்க பரிந்துரைத்தனர். இதற்காக, 1.40 லட்சம் ரூபாயில் கொட்டகை அமைத்து, 1.25 லட்சம் ரூபாய் செலவிட்டு போர்வெல் அமைத்து, பென்சிங் உட்பட பல பணி செய்துள்ளேன். ஐந்தரை சென்ட நிலத்துக்கான பத்திரத்தை பிணையாக வழங்குவதாக கூறியும், வங்கி மேலாளர் கடன் தராமல் இழுத்தடிக்கிறார். இம்மாத இறுதிக்குள் கடன் வழங்க மறுத்தால் செப்.,3ல் வங்கி கிளை முன் வங்கி கடன் கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ