மேலும் செய்திகள்
தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்
23-Sep-2026
ஈரோடு:ஈரோட்டில், கொங்கு மண்டல ஐக்கிய பீடி தொழிலாளர் சங்கம் - ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் கோரிக்கை மாநாடு நடந்தது.மாவட்ட துணைத் தலைவர்கள் யூசுப், அசரப் அலி, ஜிலானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுத்தப்பாடி மெகரூன் கொடியேற்றினார். மாநில பொதுச் செயலாளர் சின்னசாமி, சர்தார், வகிதாபானு, மதினா, மன்சூர் உட்பட பலர் பேசினர்.தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பீடி தொழிலாளர் வேலை நிபந்தனைகள் சட்டம்-1966, பீடி தொழிலாளர் நல நிதிச்சட்டம்-1976, பீடி தொழிலாளர் நல செஸ் சட்டம்-1976ஐ தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். பி.எப்., திட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம், 9,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.பீடி தொழிலாளர்களுக்கு கடந்த, 2025 மே, 9 உடன் மூன்றாண்டு கால ஊதிய ஒப்பந்தம் காலாவதியானது. 16 மாதமாகிவிட்டதால், புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். பீடி ஆலை நிர்வாகிகள், 1,000 பீடி சுற்றுவதற்கு தேவையான அளவு இலை, துாள் வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் பி.எப்., - இ.எஸ்.ஐ., திட்டத்தில் உறுப்பினராக்க வேண்டும், என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
23-Sep-2026