உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேனீக்கள் கொட்டி தொழிலாளர் காயம்

தேனீக்கள் கொட்டி தொழிலாளர் காயம்

சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே குத்தியாலத்துார் பஞ்.,ல் நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் மூன்று குழுவாக பிரிந்து ஏலஞ்சி என்ற இடத்தில் வரப்பு அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது மரத்திலிருந்த மலைத்தேனீக்கள் பறந்து, தொழிலாளர்களை சரமாரியாக கொட்டின.இதில் கரளியத்தை சேர்ந்த மகேஷ்வரி, காளியம்மாள், ஆறுவித்தி, பத்ரி, சடையம்மாள், ஏலஞ்சியை சேர்ந்த சின்னமாதப்பன், லட்சுமி, ஆறுமுகம், ராமக்காள், மணிகண்டன்,(பணித்தள பொறுப்பாளர்)லலிதா, அலமேலு, பெருமாள், குப்பம்மாள் என, ௧௦ பெண்கள், நான்கு ஆண்கள் காயமடைந்தனர். அனைவரும் மேல் சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் மகேஷ்வரி, சடையம்மாள் சத்தி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை