உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாரதியார் நினைவு நாள் நுாலகத்தில் மரியாதை

பாரதியார் நினைவு நாள் நுாலகத்தில் மரியாதை

ஈரோடு, ஈரோடு கருங்கல்பாளையத்தில் முழு நேர கிளை நுாலகம் செயல்படுகிறது. இங்கு, 1921 ஜூலை 21ல் ஆண்டு விழாவை முன்னிட்டு, மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் பாரதியார் பேசினார். இதுவே பொது வெளியில் அவர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி. இதன் பிறகு அதே ஆண்டில் செப்.,11ல் இறந்தார். இதனால் இந்த நுாலகம் பாரதியார் இறுதி காலடி தடம் பதித்த நுாலகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இங்கு ஆண்டுதோறும் பாரதியார் நினைவு நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அவர் நினைவு நாளான நேற்று பள்ளி மாணவ, மாணவிகள் மலர் துாவி மரியாதை செய்தனர். வாசகர் வட்டம் சார்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை நுாலகர் கலைச்செல்வி செய்திருந்தார்.* சென்னிமலையில் மகாகவி பாரதி சிந்தனை பேரவை சார்பாக, பாரதி நினைவு நாள் கூட்டம், பேரவை தலைவர் தண்டபாணி தலைமையில் நேற்று நடந்தது. குமரன் சதுக்கத்தில் பாரதி போட்டோவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் செயலர் வாசுதேவன், பொருளாளர் பொன்னுசாமி, துணைத்தலைவர் பொன்ஆறுமுகம், திருக்குறள் பேரவை தலைவர் புலவர் திருவள்ளுவர் உட்பட பிற அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை