உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு

பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில், மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று நீர்வரத்து, 257 கன அடியாக இருந்தது. நீர்மட்டம், 98.87 அடி, நீர் இருப்பு, 27.8 டி.எம்.சி.,யாக இருந்தது.கீழ்பவானி பாசனத்துக்கு, 1,700 கன அடி தண்ணீர்; அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 550 கன அடி; குடிநீர் தேவைக்கு, 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால், அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை