உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூவன் வாழைத்தார் விலை உயர்வு

பூவன் வாழைத்தார் விலை உயர்வு

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி மார்க்கெட்டில், பொங்கல் பண்டிகையால் வாழைத்தார் விலை நேற்று உயர்ந்தது. பூவன் ரகம் ஒரு தார், 500 ரூபாய், ரஸ்தாளி, 600 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கடந்த வாரங்களில், 18 கிலோ எடை கொண்ட பூவன் வாழைத்தார், 300 ரூபாய்க்கு விற்ற நிலையில், 500 ரூபாய்க்கு விற்பனையானது. வியாபாரிகள் கூறியதாவது: கடந்த வாரத்தை விட இந்த வாரம் வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை என்பதால் விலையும் உயர்ந்தது. கடந்த வாரத்தை விட, 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பூவன் வரத்து அதிகரித்தாலும், விலையும் உயர்ந்தது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை