பைக் திருடியவர் கைது
பெருந்துறை, பெருந்துறையை அடுத்த, கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் விஜய், 35; ஹோட்டல் நடத்தி வருகிறார். ஹோட்டல் முன் நிறுத்தியிருந்த இவரது சி.டி., 100 பைக் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின்படி பெருந்துறை போலீசார், களவாணியை தேடி வந்தனர். இந்நிலையில் மொடக்குறிச்சியில் பைக் திருட முயன்ற ஆசாமியை, அப்பகுதி மக்கள் பிடித்து, மொடக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், திருப்பூர் பழங்கரை திருமுருகன்பூண்டி ஆத்துப்பாலத்தை சேர்ந்த விஜய் என்கிற பூபாலன், 27 என்பது தெரிந்தது. ஈரோடு மாணிக்கம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் அருகில் தற்போது வசித்தபடி, பைக் திருட முயன்றது தெரிய வந்தது. மேலும், பெருந்துறையில் பைக் திருடியதையும் ஒப்புக் கொண்டார். பூபாலனை போலீசார் கைது செய்தனர்.