சென்னிமலை வனத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ள வனப்பகுதி, 1,400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வனத்துறையின் கட்டுப்-பாட்டில் காப்புக்காடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வனப்பகுதியில் நிலப்பரப்பு பறவை கணக்கெடுக்கும் பணி இரண்டு நாள் நடந்தது. இரண்டு தன்னார்வலர், வனவர் முருகன் உட்பட பலர் ஈடுபட்டனர். சென்னிமலை மலை கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை, தோப்புப்பாளையம், வெப்பிலி, சில்லாங்காட்டுவலசு, அய்யம்பாளையம், மேலப்பாளையம், ஊத்துக்குளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கணக்கெடுப்பில், 23 வகையான பறவைகள் வசிப்பது தெரிய வந்துள்ளது.