உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பர்த் டே சீட்டாட்டம் 8 பேர் கும்பல் அலேக்

பர்த் டே சீட்டாட்டம் 8 பேர் கும்பல் அலேக்

அறச்சலுார்:ஈரோடு, பட்டேல் வீதியை சேர்ந்தவர் தங்கராஜ், 61; வீரப்பன்சத்திரம் காளியப்பா வீதி வெங்கடேஷ், 31; வீரப்பன்சத்திரம் மாரப்பன் வீதி கண்ணன், 33; திண்டல், நல்லியம்பாளையம் அரவிந்தன், 35; ரங்கம்பாளையம் குணசேகரன், 46; கருங்கல்பாளையம், அரசு இளங்கோ வீதி கோபிநாத், 28; பி.பி.அக்ரஹாரம், பாவேந்தர் வீதி சவுந்தர்யன், 20; முத்தம்பாளையம், வெற்றிவேல் நகர் முருகானந்தம், 44, ஆகியோர், அறச்சலுாரில் வாழை தோட்ட வலசு என்ற இடத்தில், ஒரு தோப்பில் சீட்டாட்டம் ஆடினர்.ரோந்து சென்ற அறச்சலுார் போலீசார், எட்டு பேரையும் கைது செய்து, ௫௮ ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் அரவிந்தன் என்பவரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், சீட்டாடியதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !