உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானிக்கு தண்ணீர் திறக்க பா.ஜ., - எம்.எல்.ஏ., மனு

கீழ்பவானிக்கு தண்ணீர் திறக்க பா.ஜ., - எம்.எல்.ஏ., மனு

ஈரோடு, மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி, ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், நேறஅறு வழங்கிய மனுவில் கூறியதாவது:பவானிசாகர் அணை நீர்மட்டம், 100 அடியை எட்டியுள்ளது. வழக்கமாக கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு ஆக.,15ல் தண்ணீர் திறக்கப்படும். அணை நிரம்பியுள்ளதால், ஆக.,1 முதலே தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் கரும்பு, வாழை பயிர்களுக்கு அதிக நீர் தேவை. எனவே கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்தால் பயனுடையதாக அமையும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !