பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குண்டடம் துணை மின் நிலைய பகுதிகளில், 60 நாட்களுக்கு ஒரு முறை மின் அளவீடு செய்வதை விட்டு, 120 நாட்களுக்கு மேல் அளவீடு செய்கின்றனர். இதனால் மின் கட்டண தொகை அதிகமாக வருவதாக கூறி, குண்டடம் மின்வாரிய அலுவலகம் அருகே, பா.ஜ.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். நிர்வாகிகள் சுகுமார், யோகேஸ்வரன், கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.