உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ., மும்மொழி கையெழுத்து இயக்கம்

பா.ஜ., மும்மொழி கையெழுத்து இயக்கம்

ஈரோடு : மும்மொழி கொள்கையை ஆதரித்து, பா.ஜ., சார்பில் தமிழகத்தில் நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தது. இதன்படி ஈரோடு சூரம்பட்டியில் நடந்த இயக்கத்தை, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி துவக்கி வைத்தார். தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில் தலைமை வகித்தார். துணை தலைவர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மும்மொழி கொள்கையை தி.மு.க., எதிர்ப்பதன் காரணம் குறித்தும், இருவேறு துண்டறிக்கையை மக்களிடம் வழங்கினர்.* பெருந்துறை நகர பா.ஜ., சார்பில், பழைய பஸ் ஸ்டாண்டில் கையெழுத்து இயக்கம் நடந்தது. மாவட்ட முன்னாள் தலைவர் வேதானந்தம் தொடங்கி வைத்து, துண்டு பிரசுரம் வழங்கினார். தெற்கு மாவட்ட பொது செயலாளர் ராயல் சரவணன், பெருந்துறை நகர தலைவர் பூர்ணசந்திரன், பெருந்துறை தெற்கு ஒன்றிய தலைவர் நந்தகுமார், வடக்கு ஒன்றிய தலைவர் உமா உட்பட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை