உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் மூழ்கிய ஊழியர் சடலமாக மீட்பு

வாய்க்காலில் மூழ்கிய ஊழியர் சடலமாக மீட்பு

பவானிசாகர், கோவை மருதமலையை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் பூபதி, 18; தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன், பவானிசாகர் பூங்காவுக்கு கடந்த, 2ல் வந்தார். ஊருக்கு திரும்பும் வழியில் தொப்பம்பாளையம் அருகே, கீழ்பவானி வாய்க்காலில் குளித்தனர். வாய்க்காலின் நடுவே ஆழமான பகுதிக்கு சென்ற பூபதி, நீரில் மூழ்கி மாயமானார். சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். மூன்றாவது நாளாக நேற்றும் பணி நீடித்த நிலையில் செண்பகப்புதுார் கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே பூபதி உடல் கரை ஒதுங்கியது. தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்ட பவானிசாகர் போலீசார், சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !