விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ், கூலி உயர்வு உடன்பாடு
சென்னிமலை, சென்னிமலையில் ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த, 2022ல் தீபாவளி போனஸ் மற்றும் கூலி உயர்வு குறித்த மூன்றாண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. காலாவதியான நிலையில் அடுத்த மூன்றாண்டுக்கான போனஸ் ஒப்பந்தம், கூலி உயர்வு தொடர்பாக, அனைத்து கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள், சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர் சங்கத்தில் மனு கொடுத்திருந்தனர். இதுகுறித்து நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் தொகையாக, 2025 முதல் 2027 வரை, 8.33 சதவீதம்; கூலி உயர்வாக, 2025 மற்றும் ௨௦௨௬க்கு தலா ௬ சதவீதம், 2027க்கு உயர்வு இல்லை என்றும் உடன்பாடு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். இதை தொடர்ந்து நாளை நடத்துவதாக அறிவித்திருந்த ஆர்ப்பாட்டத்தை, விசைத்தறி தொழிலாளர்கள் ரத்து செய்துவிட்டனர். மேலும் தீபாவளிக்கு ஆறு நாட்களுக்கு முன்பே, போனஸ் உடன்பாடும் ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.