உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகார் மனுக்களை சேகரிக்க கலெக்டர் ஆபீசில் பெட்டி

புகார் மனுக்களை சேகரிக்க கலெக்டர் ஆபீசில் பெட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதியால், கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்-ளது. ஆனாலும் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு தருவதற்காக, திங்கள்கிழமைகளில் கலெக்டர் அலுவலகம் வருகின்றனர். இவர்களுக்காக அலுவலக நுழைவு வாயில் பகு-தியில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மனுக்களை அலுவலக அதி-காரிகள் பெறாத நிலையில், பெட்டியில் போட்டு சென்றனர். இந்த வகையில் நேற்று, 50க்கும் குறைவான மனுக்களே வரப்பெற்று, தொடர்புடைய துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை