உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல்போன் பறித்த சிறுவர்கள் சிக்கினர்

மொபைல்போன் பறித்த சிறுவர்கள் சிக்கினர்

ஈரோடு: வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், ஈ.பி.பி.நகரை சேர்ந்த மினிராஜ் மனைவி ரதிகலா, 46; சூளை சி.கே.நகர் அருகே மொபைல்-போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது மொபட்டில் வந்த இருவர், மொபைல்போனை பறித்து தப்பினர். ரதிகலா புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் மொபைல் போனை பறித்த வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன், பி.பெ.அக்ரஹாரத்தை சேர்ந்த, 18 வயது சிறுவன் என இருவரை கைது செய்து மொபைல்போனை மீட்டனர். இருவரையும் கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி