கொத்தமங்கலம் டிரைவர் மூளைச்சாவு உடலுறுப்புகள் தானம்; அரசு மரியாதை
பவானிசாகர்: பவானிசாகரை அடுத்த கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் கோவிந்-தராஜ், 47, லாரி டிரைவர். இவரது மனைவி கீதா. கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மைசூருக்கு லோடு ஏற்றிச் சென்றார். கண்-ணனுார் என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார். மைசூரு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். கோவிந்த-ராஜின் உடலுறுப்புக்களை தானம் செய்ய மனைவி கீதா மற்றும் குடும்பத்தினர் சம்மதித்தனர். அவரது கண் விழித்திரை, கல்லீரல், கணையம் ஆகிய உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. கோவிந்தராஜின் உடல் கொத்தமங்கலத்துக்கு நேற்றிரவு கொண்டுவரப்பட்டது. அரசு சார்பில் அவரது உடலுக்கு மலர்வ-ளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. உயிரிழந்த கோவிந்தராஜுக்கு, ௧௨ மற்றும் ௧௦ வயதில் இரு மகள்கள் உள்-ளனர்.