மேலும் செய்திகள்
விவசாயி மூளைச்சாவு; 5 பேருக்கு மறுவாழ்வு
04-Oct-2025
பெருந்துறை, ஈரோட்டை அடுத்த பெரியசேமூர், புது காலனியை சேர்ந்த ரமேஷ் மனைவி மகேஸ்வரி, 41; தம்பதிக்கு, 18, 17 வயததில் இரு மகன்கள் உள்ளனர். கடந்த, 21ம் தேதி கணவன்-மனைவி இருவரும், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பைக்கில் சென்றனர். அப்போது சாலையில் விழுந்த மகேஸ்வரி, தலையில் பலத்த காயமடைந்தார். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், 23ம் தேதி பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது கணவர் உள்ளிட்டோர், மகேஸ்வரி உடலுறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனர். இதன்படி கல்லீரல், இரு சிறுநீரகம் மற்றும் இரு கண்கள் ஆப்பரேஷனில் அகற்றப்பட்டு, தேவைப்படும் பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
04-Oct-2025