உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலை விபத்தில் மூளைச்சாவு இளைஞர் உடலுறுப்பு தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு இளைஞர் உடலுறுப்பு தானம்

பெருந்துறை: ஈரோடு மாவட்டம் கவுண்டச்சிபாளையம், மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜ்-குமார், 28; தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம், 26ம் தேதி டூவீலரில் சென்றபோது, சாலை விபத்தில் சிக்கினார். தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மூளைச்-சாவு அடைந்தார். குடும்பத்தினரின் அனுமதியுடன், அவரது கல்-லீரல், இரு சிறுநீரகங்கள், கண்கள் தானமாக பெறப்பட்டன. பலி-யான ராஜ்குமார் திருமணம் ஆகாதவர். தந்தை இல்லை. தாய் மற்றும் இரு சகோதரிகள் உள்ளனர். அரசு மரியாதை செய்யப்-பட்டு, குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 15வது உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள-தாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி