மேலும் செய்திகள்
2 கடைகளை உடைத்து திருட்டு
15-Dec-2024
வீட்டின் கதவை உடைத்து ரூ. 98 ஆயிரம் திருட்டுதாராபுரம், ஜன. 2-திருப்பூர் மாவட்டம், தாராபுரம், பழனி சாலையில் உள்ள மணக்கடவை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 54. விவசாயியான இவர், தனது மருமகள் பிரசவ செலவுக்காக, பீரோவில், 98 ஆயிரம் ரூபாய் வைத்து இருந்தார். இந்நிலையில் சுப்பிரமணி குடும்பத்தினர் கடந்த, 30 இரவு, வீட்டை பூட்டி விட்டு, சீத்தக்காட்டில் உள்ள தோட்டத்துக்கு சென்றனர். மறுநாள் மாலை, 5:00 மணியளவில், வீட்டுக்கு சென்று பார்த்த போது, முன் பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, மேஜையில் இருந்த சாவி மூலம் பீரோவில் இருந்த, 98 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இது தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
15-Dec-2024