மேலும் செய்திகள்
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி
05-Aug-2025
கோபி, அரசு மருத்துவமனை சார்பில், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி கோபியில் நேற்று நடந்தது.தலைமை மருத்துவ அலுவலர் கல்யாணி பேரணியை துவக்கி வைத்தார். கோபி அரசு மருத்துவமனையில் துவங்கிய பேரணியில், தனியார் நர்சிங் கல்லுாரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி, கோபி பஸ் ஸ்டாண்டு வரை சென்றனர். பேரணி முடிவில், கோபி அரசு மருத்துவமனை வளாகத்தில், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு நாடகம் நடந்தது.
05-Aug-2025