உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தோட்டத்தில் ஒயர் திருடிய சகோதரர்கள் கைது

தோட்டத்தில் ஒயர் திருடிய சகோதரர்கள் கைது

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த மணக்கடவு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 40; அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு நேற்று மதியம் சென்றார். விவசாய கிணற்றுக்கு செல்லும் கேபிள் ஒயர்களை மூன்று பேர் திருடி கொண்டிருந்ததை கண்டு கூச்சலிட்டார். அப்பகுதியினர் திரண்டு மூவரையும் சுற்றி வளைத்தனர். அலங்கியம் போலீசார் விசாரணையில், சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த சக்திவேல், 30, சின்ராஜ், 26, ரவி, 24, என்பதும், மூவரும் சகோதரர்கள் என்பதும் தெரிந்தது. அலங்கியம் போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை