மேலும் செய்திகள்
நகை, பணம் திருட்டு
15-Sep-2024
காங்கேயம்: வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; திருப்பூர் தனியார் நிறுவன ஊழியர்.நேற்று மதியம் இவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த மூன்று பவுன் நகை, 40 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. இவரது பக்கத்து வீடான சக்திவேல் வீட்டிலும், ஒரு பவுன் மோதிரம், 5,௦௦௦ ரூபாய் திருட்டு போயுள்ளது. புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Sep-2024