உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடும் பஸ்ஸில் தீயால்தாராபுரத்தில் பரபரப்பு

ஓடும் பஸ்ஸில் தீயால்தாராபுரத்தில் பரபரப்பு

தாராபுரம்:திருப்பூரில் இருந்து பழனிக்கு, ஒரு அரசு பஸ் நேற்று மாலை, 5:30 மணிக்கு புறப்பட்டது. தாராபுரத்துக்கு, 6:30 மணிக்கு வந்தது. பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்பி மின்வாரிய அலுவலகம் வழியாக சென்றபோது, இன்ஜினில் தீப்பிடித்தது. இதைக் கண்டு பயணிகள் அலறினர். அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் அர்ஜூன் அளித்த தகவலின்படி, தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். இன்ஜினில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பஸ்ஸில் பயணித்த, ௩0க்கும் மேற்பட்ட பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை