உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொடச்சூர் வார சந்தையில் பருப்பு வியாபாரம் மந்தம்

மொடச்சூர் வார சந்தையில் பருப்பு வியாபாரம் மந்தம்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ), 170 ரூபாய், குண்டு உளுந்து, 140, பச்சை பயிர், 120, பாசிப்பருப்பு, 130, கடலைப்பருப்பு, 110, மல்லி, 120 முதல், 140 ரூபாய் வரை விற்றது. சீரகம், 400, கொள்ளு, 100, வரமிளகாய், 180 ரூபாய் முதல், 200 ரூபாய்; புளி, 120, பூண்டு, 320 ரூபாய் முதல், 400 ரூபாய்; கடுகு, 100, தட்டைப்பயிர், 130, பொட்டுக்கடலை, 130 முதல், 140 ரூபாய்; மிளகு, 800 ரூபாய் வரை விலைபோனது. தீபாவளி பண்டிகை என்பதால், புதிய துணிகள் எடுக்க மக்கள் ஆர்வம் காட்டுவதால், பருப்பு வியாபாரம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை