உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

காங்கேயம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில், பச்சாபாளையம், பழையகோட்டை, ராசாத்தாவலசு, குட்டப்பாளையம், ஆரத்தொழுவு, கணபதிபாளையம், காங்கேயம்பாளையம், சம்பந்தம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு கிராம உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர். வரும் ஆக., 8ம் தேதி மாலை, 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் காங்கேயம் வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது, 21; அதிகபட்ச வயது, 32 (பொது பிரிவினருக்கு), இதர பிரிவினருக்கு, 37 வயது. விண்ணப்பத்தை tiruppur nic.in/notice category/recruitment என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை