மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 203 மனு வழங்கல்
27-May-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகம் மூலம், சிறுபான்மையினரான இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வயது முதிர்ந்த, ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மகளிர் நலனுக்காகவும், உலமாக்கள், பணியாளர்களுக்கும் தனித்தனியாக கலெக்டர் தலைமையில் உதவும் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.சங்கம் திரட்டும் நிதி ஆதாரத்துக்கு ஏற்ப, சங்கத்துக்கு ஆண்டு தோறும், தலா, 20 லட்சம் ரூபாய் வரை அரசால் இணை மானியம், 1:2 என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. உலமாக்களுக்கு மானியத்தில் டூவீலர், மற்றவர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் உட்பட பல உதவிகள் வழங்கப்படுகிறது.கூடுதல் விபரத்துக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரிலும், 94454 77885 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
27-May-2025