உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நெல் காப்பீடு செய்ய அழைப்பு

நெல் காப்பீடு செய்ய அழைப்பு

ஈரோடு:ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், நடப்பு ரபி சிறப்பு பருவத்தில் நெல் பயிர், பிர்கா அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கை செய்யப்பட்ட பிர்காக்களில் கடன் பெறும் விவசாயிகளுக்கு, கடன் பெற்ற தேசிய வங்கி அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் விவசாயிகள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்யும். மற்றவர்கள் இதுபோன்ற வங்கி, இ-சேவை மையங்களில் 577.50 ரூபாய் காப்பீடு தொகையாக செலுத்தலாம். நெல் பயிர் காப்பீட்டுக்கு வரும், 15ம் தேதி கடைசி நாள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை