குழந்தை தொழிலாளர் புகார் தெரிவிக்க அழைப்பு
திருப்பூர், திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காயத்ரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:நிறுவனங்கள் உள்ளிட்ட பணித்தளங்களில், 14 வயதுக்குட்பட்டவர்கள், எவ்வித பணியிலும் ஈடுபடுத்தப்படக்கூடாது.குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு, 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்; 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 'குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் எவரேனும் பணியமர்த்தப்பட்டால், 'சைல்டு லைன்' எண், 1098க்கு டயல் செய்து புகார் தெரிவிக்கலாம். http://pencil.gov.in/Users/login என்ற இணைய தளத்திலும் புகார் தெரிவிக்கலாம்; புகார் அளிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.