எல்.பி.ஜி., தேய்ப்பு பெட்டி பயனாளிகளுக்கு அழைப்பு
எல்.பி.ஜி., தேய்ப்பு பெட்டிபயனாளிகளுக்கு அழைப்புஈரோடு, செப். 28-பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல இன மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்காக, இத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் சலவை தொழில் மேற்கொள்வோருக்கு, கரியால் இயங்கும் பித்தளை தேய்ப்பு பெட்டி வழங்கப்பட்து.தற்போது இதற்குப்பதிலாக திரவ பெட்ரோலிய வாயுவில் (எல்.பி.ஜி.,) இயங்கும் தேய்ப்பு பெட்டி வழங்கப்படுகிறது. சலவை தொழில் செய்து, ஆண்டு குடும்ப வருவாய், ஒரு லட்சத்துக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஈரோடு கலெக்டர் அலுவலகம், நான்காம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.