உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நந்தா கல்லுாரிகளில் வளாகத்தேர்வு

நந்தா கல்லுாரிகளில் வளாகத்தேர்வு

ஈரோடு:ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகளில், இறுதியாண்டு பயின்று வரும் கணினி அறிவியல் பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு, ஸோஹொ கார்ப் நிறுவனத்தின் வளாகத் தேர்வு நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். ஸோஹொ கார்ப் நிறுவன மனிதவள மேலாளர் சங்கர் சுப்பையா, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பொறியியல் கல்லுாரி முதல்வர் ரகுபதி, தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் நந்தகோபால் முன்னிலை வகித்தனர்.முதலில் எழுத்து தேர்வு, அதை தொடந்து குழு விவாதம் நடக்கும். பின் மாணவர்களின் தனித்திறன்களின் அடிப்படையில், 5 லட்சம் முதல் எட்டு லட்சம் வருட சம்பளம் பெறும் வகையில் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.தேர்வுக்கான ஏற்பாடு களை செய்த கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆசிரியர்களை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன் மற்றும் நிர்வாகி கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !